சொல் பொருள்
(வி) 1. ஒளிர், பிரகாசி, 2. திகழ், சிறப்பாக இரு, 3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு,
சொல் பொருள் விளக்கம்
1. ஒளிர், பிரகாசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shine, be renowned, illustrious, be clear, understand the meaning
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3 ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடை திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு தாமும் அவரும் ஓராங்கு விளங்க காமர் கவினிய பேரிளம் பெண்டிர் – மது 461-465 திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப் பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து, தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி, ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 768-770 கடல் நடுவே ஞாயிறு போன்றும், பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாகத் திகழ்ந்து சிறந்த வேதம் விளங்க பாடி – மது 468 சிறந்த வேதங்களைத் தமக்குப் பொருள்தெரியும்படி ஓதி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்