சொல் பொருள்
1. (வி) கீழ் நோக்கி விசையுடன் இறங்கு,
2. (பெ.அ) சிறந்த, மேன்மையான,
சொல் பொருள் விளக்கம்
கீழ் நோக்கி விசையுடன் இறங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fall down
excellent, lofty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுந்த மாரி பெரும் தண் சாரல் – நற் 244/1 விழுந்த மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில் பொன் மலிந்த விழு பண்டம் – மது 81 பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் – அகம் 35/6 வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்