சொல் பொருள்
வெண்ணிற உலோகம், சுக்கிரன், வெண்மை
சொல் பொருள் விளக்கம்
வெண்ணிற உலோகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
silver, The planet Venus, whiteness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110 வெள்ளியைப் போன்ற ஒளிரும் சாந்தை வாரிப்பூசி வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 72 வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36 வெண்சங்கு வளையல்களையும், புடைத்த இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்