வேரல் என்பது சிறு மூங்கில்
1. சொல் பொருள்
சிறு மூங்கில்
2. சொல் பொருள் விளக்கம்
சிறு மூங்கில்
மொழிபெயர்ப்புகள்
Calcutta bamboo, hard bamboo, iron bamboo, male bamboo, solid bamboo, stone bamboo • Bengali: বাঁশ bamsa • Gujarati: બાંસ bans • Hindi: बांस bans • Kannada: ಬಿದಿರು bidiru • Konkani: वासो vaaso • Malayalam: കല്ലന്മുള kallanmula • Manipuri: khokwa • Marathi: बांस or बास bans, उढा udha, वेळू velu • Mizo: tur-sing • Nepalese: कबान बाँस kaban bans • Oriya: bans • Sanskrit: वंश vansha • Tamil: சிறுமூங்கில் ciru-munkil, கல்மூங்கில் kal-munkil, காட்டுமூங்கில் kattu-munkil • Telugu: పోతువెదురు potu veduru • Urdu: بانس bansa
3. ஆங்கிலம்
small bamboo
Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 223,224 முழுப் பாதையும் பின்னி வளர்ந்த நுண்ணிதான கோல்களையுடைய வேரல் என்னும் சிறுமூங்கிலுடன் எருவை என்னும் நாணலின் மெல்லிய கோல்களையும் (பிடித்துக்)கொண்டவர்களாய்ச் செல்லுங்கள் விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71 விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ வேரல் வேலி சிறுகுடி அலற - நற் 232/4 வாழைத்தோப்பில் மேய்ந்த யானை அது திகட்டியதால் ஊரில் போடப்பட்டிருந்த வேரல் வேலியை மிதித்துக்கொண்டு நுழைந்து பலாப்பழங்களைத் தின்றதாம். வேரல் வேலி வேர் கோள் பலவின் - குறு 18/1 வேரலை பலா மரங்களுக்கு வேலியாகப் போட்டிருப்பார்கள். வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் - சீறா:4210/2 ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 297,298
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்