சொல் பொருள்

(பெ) 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்

2. சோழமன்னனின் மகள்

சொல் பொருள் விளக்கம்

1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a philanthropist

daughter of a chozha king

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாள்மகிழ் இருக்கை – அகம் 76/3,4

இனிய கடுங்கள்ளினையுடைய அஃதை என்பவனின், யானைகளோடு
நல்ல அணிகலன்களையும் ஈயும் அத்தாணிமண்டப அமர்வு (நாளோலக்கம்) –

மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4

அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் – அகம் 96/12,13

அழகு ஒழுகும் மாமை நிறத்தினையுடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
பெருமை தங்கிய யானையைக்கொண்ட, போரில் அழிக்கும் சோழர் –

பார்க்க – அகுதை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.