Skip to content

சொல் பொருள்

  • அகப்பை – சோறு

சொல் பொருள் விளக்கம்

அகப்பை, சோறு எடுத்துப் போடும் கருவி. அதனை ‘ஆப்பை’ எனவும் வழங்குகின்றனர். அகப்பை, கருவியைக் குறியாமல் சோற்றைக் குறிப்பது வழக்கில் உள்ளது. ‘அகப்பையடி’ என்பது சோற்றுக்கு இல்லாமை; ‘அகப்பை நோய்’ என்பது வறுமை. ‘வறுமை எனின் எளிய வறுமையன்று; சோற்றுக்கு இல்லாக் கொடிய வறுமை. ‘அகப்பை (அகம்+பை) வயிற்றைக் குறித்தல் இலக்கிய நெறி : அகப் பைக்கு அள்ளியிடும் கருவியை அகப்பை என்றதும்’ அதனைச் சோற்றுக்கு ஆக்கியதும் வழக்கியல் நெறி.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *