Skip to content
அகம்

அகம் என்பதன் பொருள் உட்புறம், செருக்கு, மனம், மனை, பாவம், இடம், உள், உயிர்களின் உணர்ச்சி இன்பம்

1. சொல் பொருள்

  • உட்புறம்
  • செருக்கு
  • மனம்
  • மனை.
  • பாவம்
  • இடம்
  • உள்
  • உயிர்களின் உணர்ச்சி இன்பம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

  1. heart, mind
  2. inside
  3. home / house
  4. pride
  5. arrogant

3. வேர்ச்சொல்லியல்

இது Gk. eikos, house என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது ஆசயம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

4. சொல் பொருள் விளக்கம்

மனம், மனை, பாவம், இடம், உள் முதலிய பொருள் தரும் சொல். ஆயினும் வழக்கில் ‘அகம் உனக்கு மிஞ்சி விட்டது’ ‘அகம்-பிடித்தவன்’ என வருவனவற்றால் அதற்குச் செருக்கு என்னும் பொருள் உண்மை விளங்கும். இதனை ‘அகம்-பாவம்’ எனக் கூறுவதும் உண்டு. “அவன் அகம்-பாவத்திற்கு ஒரு நாள் அழிவு வராமல் போகாது” என்பதில் அகம் என்பதன் பொருளே அகம்பாவத்திற்கும் உள்ளமை விளங்கும். உள்ளுள் தன்னைப் பெருமிதமாக நினைத்துக் கொண்டு பேசுவதாலும். செய லாற்றுவதாலும், ‘அகம்’ என்பதற்குச் ‘செருக்கு’ என்னும் பொருள் ஏற்பட்டதாகலாம்.

இது உயிர்களின் உணர்ச்சி இன்பம்; உயிர்கள் என்றால் ஆண் பெண் இருவகையே. அவ்விருவகை உயிர்களின் உள்ளத்துணர்ச்சி புறங்கூற இயலாத அளவுக்கு நுட்பமாய் அகத்தளவில் நிகழ்வதால் அது மட்டும் அவ்வியல்பு கருதி அகம் என வகுத்துக் கொள்ளப்பட்டது.
(திருக்குறள் அறம். 29.)

பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது, ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும். பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கூடும்போது பிறக்கும் இன்பம் அவர்கள் அகத்தால் (உள்ளத்தால்) உணரப்படுவது. இதனாலேயே அஃது அகம் எனப்பட்டது என்பர். வாழ்வின் அகம் சார்ந்த பகுதி அகத்திணை எனப்பட்டது.

இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு அகவாழ்வைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், கைக்கிளை, பெருந்திணை என எழுவகையாக உரிப்பொருளை வகுத்து விளக்குகிறது தமிழ் இலக்கணம்.  ஐந்திணையொழுக்கம் அடிப்படையில் களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என அக வாழ்வினை இரண்டாகப் பிரிப்பர்.  

அகம் agam
அகம் agam

5. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி - குறள் 28/13

முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி - குறள் 71/15

அகம் நக நட்பது நட்பு - குறள் 79/12

அகம் நட்பு ஒரீஇவிடல் - குறள் 83/20

சீர் திகழ் சிலம்புஅகம் சிலம்ப பாடி - திரு 40

நுரை தலை குரை புனல் வரைப்புஅகம் புகு-தொறும் - பொரு 240

விரி கடல் வேலி வியல்அகம் விளங்க - சிறு 114

புனை இரும் கதுப்புஅகம் பொலிய பொன்னின் - பெரும் 485

நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு - முல் 44

கமம் சூழ் கோடை விடர்அகம் முகந்து - மது 308

பழையன் மோகூர் அவைஅகம் விளங்க - மது 508

குழு மலை விடர்அகம் உடையவால் எனவே - குறி 261

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் - மலை 81

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ - மலை 184

கூவல் அன்ன விடர்அகம் புகு-மின் - மலை 366

விழு நீர் வியல்அகம் தூணி ஆக - நற் 16/7

மா இரும் பரப்புஅகம் துணிய நோக்கி - நற் 31/1

காம்பு உடை விடர்அகம் சிலம்ப பாம்பு உடன்று - நற் 51/2

கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று - நற் 163/10

இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் - நற் 166/5

மா மலை விடர்அகம் கவைஇ காண்வர - நற் 202/7

மெல்ல வந்து நல் அகம் பெற்றமை - நற் 297/9

என்றூழ் விடர் அகம் சிலம்ப - நற் 318/8

பெரும் கல் விடர்அகம் சிலம்ப இரும் புலி - நற் 344/9

மா மலை விடர்அகம் விளங்க மின்னி - நற் 371/2

வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் - நற் 371/4

மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப - குறு 137/1

மை அணி மருங்கின் மலைஅகம் சேரவும் - குறு 319/4

நல் அகம் நயந்து தான் உயங்கி - குறு 346/7

நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே - குறு 370/5

துறை படி அம்பி அகம்அணை ஈனும் - ஐங் 168/2

உடல்அகம் கொள்வோர் இன்மையின் - ஐங் 187/4

தேம் கமழ் சிலம்பின் வரைஅகம் கமழும் - ஐங் 253/2

முடி அகம் புகா கூந்தலள் - ஐங் 374/3

நீல் நிற வியல்அகம் கவைஇய - ஐங் 401/4

எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் - ஐங் 466/3

வயங்கு கதிர் விரிந்து வான்அகம் சுடர்வர - பதி 24/23

துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த - பதி 44/21

துளங்கு நீர் வியல்அகம் கலங்க கால் பொர - பதி 51/1

ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி - பதி 52/19

வரைஅகம் நண்ணி குறும் பொறை நாடி - பதி 74/7

தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி - பதி 81/21

பாய் தேரான் வையை அகம்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் - பரி 11/61,62

புயல் புரை கதுப்புஅகம் உளரிய வளியும் - பரி 21/49

தண் தமிழ் வேலி தமிழ்நாட்டுஅகம் எல்லாம் - பரி 31/1

தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை - கலி 31/16

நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் - கலி 38/8

வேய் நரல் விடர்அகம் நீ ஒன்று பாடித்தை - கலி 40/10

வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1

படு மழை ஆடும் வரைஅகம் போலும் - கலி 103/20

பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை - கலி 144/17

காட்டாயேல் மண்அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் - கலி 144/43

கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டுஅகம் - கலி 150/11

பிடி கை அன்ன பின்அகம் தீண்டி - அகம் 9/22

மா கண் அடைய மார்புஅகம் பொருந்தி - அகம் 26/8

ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்ப - அகம் 62/14

திரு நகர் வரைப்புஅகம் புலம்ப அவனொடு - அகம் 63/2

மணி புரை செ வாய் மார்புஅகம் சிவண - அகம் 66/14

புணர் திரை பரப்புஅகம் துழைஇ தந்த - அகம் 80/5

அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து - அகம் 86/28

புல் சாய் விடர்அகம் புலம்ப வரைய - அகம் 89/4

நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து - அகம் 100/3

சில்ஐம்கூந்தல் நல் அகம் பொருந்தி - அகம் 123/6

வேங்கை சேர்ந்த வெற்புஅகம் பொலிய - அகம் 162/20

கல் முகை விடர்அகம் சிலம்ப வீழும் - அகம் 172/4

மை படு விடர்அகம் துழைஇ ஒய்யென - அகம் 192/10

அகல் இரு விசும்புஅகம் புதைய பாஅய் - அகம் 214/1

பெரு மலை விடர்அகம் வர அரிது என்னாய் - அகம் 218/12

இரும் கல் விடர்அகம் சிலம்ப பெயரும் - அகம் 232/4

கழை நரல் வியல்அகம் வெம்ப மழை மறந்து - அகம் 241/7

பெரு மலை விடர்அகம் நீடிய சிறியிலை - அகம் 242/19

பல் இதழ் மழை கண் நல்அகம் சிவப்ப - அகம் 244/9

மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ - அகம் 258/9

அணங்கு உடை வரைப்புஅகம் பொலிய வந்து இறுக்கும் - அகம் 266/19

புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய - அகம் 294/3

வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி - அகம் 353/20

வலம் படு வென்றியொடு சிலம்புஅகம் சிலம்ப - அகம் 389/22

நிலவு கடல் வரைப்பின் மண்அகம் நிழற்ற - புறம் 3/2

முலை பொலி அகம் உருப்ப நூறி - புறம் 25/10

தன் அகம் புக்க குறு நடை புறவின் - புறம் 43/6

அணங்கு உடை நெடும் கோட்டு அளைஅகம் முனைஇ - புறம் 52/1

வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி - புறம் 52/15

மார்புஅகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே - புறம் 62/15

வயல்அகம் நிறைய புதல் பூ மலர - புறம் 117/3

முலைஅகம் நனைப்ப விம்மி - புறம் 143/14

கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப - புறம் 144/5

பெரு மலை விடர்அகம் புலம்ப வேட்டு எழுந்து - புறம் 190/8

தண் தமிழ் வரைப்புஅகம் கொண்டி ஆக - புறம் 198/12

அகம் நக வாரா முகன் அழி பரிசில் - புறம் 207/4

பெரு மலை விடர்அகம் சிலம்ப முன்னி - புறம் 209/8

கரையவர் மருள திரைஅகம் பிதிர - புறம் 243/8

வரல்-தோறு அகம் மலர - புறம் 337/4

பொழில்அகம் பரந்த பெரும் செய் ஆடவர் - புறம் 362/4

முந்நீர் வரைப்புஅகம் முழுது உடன் துறந்தே - புறம் 363/18

அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி - புறம் 394/10

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் - சிலப்.புகார் 3/175

ஆயிரம்கண்ணோன் செவிஅகம் நிறைய - சிலப்.புகார் 6/20

திருமொழிக்கு அல்லது என் செவிஅகம் திறவா - சிலப்.புகார் 10/195

தீ மொழி கேட்டு செவிஅகம் புதைத்து - சிலப்.புகார் 10/229

ஏட்டுஅகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் - சிலப்.மது 13/86

நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய - சிலப்.மது 13/100

கை_அகத்து ஒழித்து அதன் கைஅகம் புக்கு - சிலப்.மது 15/49

குமரி வாழையின் குருத்துஅகம் விரித்து ஈங்கு - சிலப்.மது 16/42

வாய் அல் முறுவற்கு அவர் உள்அகம் வருந்த - சிலப்.மது 16/80

ஒரு தனி கண்டு தன் உள்அகம் வெதும்பி - சிலப்.மது 16/96

தேவ கோட்ட சிறைஅகம் புக்க பின் - சிலப்.மது 16/126

இன்புறு தம் கணவர் இடர் எரிஅகம் மூழ்க - சிலப்.மது 18/34

தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க - சிலப்.மது 18/42

கான்_அகம் உகந்த காளி தாருகன் - சிலப்.மது 20/51

திகை_முக வேழத்தின் செவிஅகம் புக்கன - சிலப்.வஞ்சி 25/155

நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த - சிலப்.வஞ்சி 26/59

கங்கை பேர் யாற்று கரைஅகம் புகுந்து - சிலப்.வஞ்சி 27/14

இடை இருள் யாமத்து எரிஅகம் புக்கதும் - சிலப்.வஞ்சி 27/78

புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது - சிலப்.வஞ்சி 30/16

உறை கவுள் வேழ கைஅகம் புக்கு - சிலப்.வஞ்சி 30/121

அகம் புகுதும் என்று இரக்கும் ஆசை இரும் கடத்து - பழ:46/2

அகம் தூய்மை இல்லாரை ஆற்ற பெருக்கி - பழ:263/1

அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று - முது:9 8/1

பாடு அகம் சாராமை பாத்திலார்தாம் விழையும் - ஏலாதி:25/1

வெம் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப - மணி 3/6

தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல - மணி 5/138

வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது - மணி 11/49

வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது - மணி 14/14

அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் - மணி 15/72

மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து என் - மணி 16/47

மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் - மணி 16/130

பார்அகம் அடங்கலும் பசிபிணி அறுக என - மணி 16/134

மனைஅகம் புகாஅ மரபினன் என்றே - மணி 18/36

செவிஅகம் புகூஉ சென்ற செவ்வியும் - மணி 18/77

கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு - மணி 18/107

குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு - மணி 18/145

பதிஅகம் திரிதரும் பைம் தொடி நங்கை - மணி 19/41

வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும் - மணி 19/46

மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் - மணி 22/49

மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை - மணி 22/89

அகம் சுடு வெம் தீ ஆய்இழை அவிப்ப - மணி 23/141

அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி - மணி 25/129

பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த - மணி 28/201

அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி - மணி 28/207

குறிப்பு:

இது ஒரு மூலச்சொல்

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *