சொல் பொருள்
(பெ) 1. அடிதொழுது வாழ்வார், 2. அடியாகிய புகலிடம், 3. அடிதொழுது வாழ்வது, 4. அடிமை,
சொல் பொருள் விளக்கம்
1. அடிதொழுது வாழ்வார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those who live in reverence to a worthy person
the feet (of a worthy person) as refuge.
living in reverence to a worthy person
slave, devoted person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/65,66 உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து உன் அடியவராம் யாமும் பொருந்தி ஒன்றுபட்டு ‘நாளும் சிறப்புற்றிருக்க – அடியுறை – அடிக்கண் வாழ்வாசுவைத்தற்கு இனிதாகிய தாளிப்பையுடைய உணவுர் – புலியூர்க் கேசிகன் உரை காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/65,66 உன்னை விரும்பும் அடியார்களோடும் சேர்ந்து நினது திருவடியாகிய புகலிடத்தின்கண்ணே யாமும் பொருந்தி ஒன்றுபட்டு ‘நாளும் சிறப்புற்றிருக்க – பொ.வே.சோ. உரை நய_தகு மரபின் விய_தகு குமர வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் நயத்தலின் சிறந்த எம் அடியுறை பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/82-85 விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே! உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம் விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடிதொழுது வாழும் வாழ்வானது நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று. இருங்குன்றத்து அடியுறை இயைக என பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/65,66 திருமாலிருஞ்சோலையின் அடியினில் வாழ்கின்ற பேறு அமைக என்று, பெரும் புகழையுடைய கண்ணனும் பலராமரும் ஆகிய உம் அடிகளைப் போற்றித் தொழுகின்றோம். நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் – கலி 140/8-11 திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண் இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், இதனை நீங்கள் வெறுக்கவேண்டாம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்