சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால ஊர், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால ஊர்,
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை சங்ககாலத்தில் அட்டவாயில் என்னும் பெயருடன்
விளங்கியது எனலாம். அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்படும். ஆடு என்னும் சொல்லுக்கு
வெற்றி என்னும் பொருள் உண்டு. அட்டு ஆடு பெற்ற ஊர் ஆடனை. ஆடனை என்பது சிறப்பிக்கப்பட்டுத்
திருவாடனை ஆயிற்று. இது சங்ககாலத்தில் நெல்வளம் மிக்கு விளங்கியது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன – அகம் 326/5,6 நீண்ட கொடிகள் அசையும் அட்டவாயில் என்னும் ஊரிடத்தே உள்ள நீண்ட கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகினை ஒத்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்