சொல் பொருள்

(பெ) 1. ஒரு வகைச் சிறிய மீன், 2. சேர நாட்டிலுள்ள ஒரு மலை.

சொல் பொருள் விளக்கம்

அயிர் – நுண் மணல். அயிரை நீர்க்குள் அடி மட்டத்திலுள்ள மணலின் அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒரு வகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தான் இருக்கும். (ஒப்பியன் மொழி நூல். 40.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Loach, sandy colour, Cobitio thermalis;

Name of a hill in the Chera country,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/1-3

கிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை
திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
அயிரைக் கூட்டத்தை எண்ணி அண்ணாந்து பார்த்தாற்போல

அயிரைமலை என்னும் சங்ககாலப் பெயர்வழக்கு அய்யனார் மலையான ஐயப்பன் மலை என மருவியுள்ளது.
நேரிமலை எனவும் இது வழங்கப்பட்டது.
அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன்
கொட்டும்.

இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல – பதி 70/24-26

இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல.

இது பழனிக்கு மேற்காக 9 மைல் தொலைவிலுள்ள ஐவர் மலை என்றும் கூறுவர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.