சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால மன்னனின் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால மன்னனின் பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The name of a king of sangam period.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1 ஐங்குறுநூறு என்னும் நூலிலுள்ள முதல்பத்துப் பாடல்களும் இந்த அடியுடன்தான் தொடங்குகின்றன. ஆதன் என்பது சேர மன்னருள் சிலருடைய குடிப்பெயர். அவினி என்பான் சேரமான்களில் ஒருவன் என்பார் ஔவை.சு.து. அவர்கள் தம் ஐங்குறுநூறு உரையில். ஆனால் அவினி என்பான் ஒரு மன்னன் என்றும் ஆதன் என்பது அவனுடைய தந்தையின் பெயர் என்றும் விக்கிப்பீடியா கூறுகிறது. ஆதன் அழிசி, ஆதன் எழினி, ஆதனுங்கன், ஆதன் ஓரி ஆகிய சங்ககால அரசர்களின் பெயர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கவை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்