சொல் பொருள்
(பெ) இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது
சொல் பொருள் விளக்கம்
இசையெழுப்பும் ஒரு தோற்கருவி. உடுக்கை போன்றது
இதை நுண்ணிதாக இயக்கவேண்டும் என்றும் இதன் ஓசை டும்,டும்; டும்டும் என்று
இரட்டையாக ஒலிக்கும் என்றும் மதுரைக்காஞ்சி கூறுகிறது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of small drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் நீர் ஆகுளி இரட்ட – மது 606 நுண்ணிய இயல்புள்ள ஆகுளி இரண்டிரண்டாக ஒலி எழுப்ப இதன் முகத்தில் விரலால் தட்டி ஒலி எழுப்பவர் என்று மலைபடுகடாம் கூறுகிறது விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்பக் குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து – மலை 140 விரல் ஊன்றிப் படிகின்ற ஒலியெழுப்பும் கண்ணையுடைய ஆகுளியைப் போன்று பேராந்தைகள் இரட்டையாக ஒலிக்கும் நீண்டமலையின் சரிவுகளில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்