ஆலறு

சொல் பொருள்

ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு.

சொல் பொருள் விளக்கம்

ஆல் என்றால் நீர். ஆலில் இருந்து (நீரில் இருந்து) தோன்றியது ஆறு. ஆல் அறுத்துக்கொண்டு பாய்ந்த இடம் ஆல் அறு என்று கூறப்பட்டது போலும். ஆலறு என்னும் சொல் பிற்காலத்தில் ஆறு என்று திரிந்து வழங்கியது போலும். நீர் தாழ்ந்த இடத்தை நோக்கி ஓடும் இயல்புள்ளது. ஆகவே ஆல்(நீர்) அறுத்துச் சென்ற வழி ஆலறு என்று வழங்கப்பட்டது என்பதில் என்ன தடை? பிறகு ஆலறு என்னுஞ்சொல் ஆறு என்று மருவியதில் என்ன ஐயம்? ஆறு என்னுஞ் சொல் இடுகுறிப் பெயர் என்று கருதி வந்தது தவறு என்பதும் அது ஆல் (நீர்) என்னும் சொல்லடியாகப் பிறந்த காரணப் பெயர் என்பதும் தெளிவாகிறது. (அஞ்சிறைத் தும்பி. 126)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.