சொல் பொருள்
1. (வி) மாறுபடு,
2. (பெ) மாறுபாடு, பகை
சொல் பொருள் விளக்கம்
(வி) மாறுபடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be inimical, disgaree
enmity, disagreement
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4 போரிட்டு மாறுபட்ட புலியைப் பிளந்த பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானை இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற பொருகளம் போலும் தொழூஉ – கலி 105/48,49 இருபெரும் வேந்தர் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட போர்க்களம் போன்று காட்சியளித்தது தொழு. இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72 பெரிய போர்த்தொழின்கண் மாறுபாடுற்ற வல்லைமையுடையோர் இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே – அகம் 0/4 பகையை அழித்து, கையினில் குந்தாலியுடன் மழுப்படை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்