Skip to content

சொல் பொருள்

1. (வி) மாறுபடு,

2. (பெ) மாறுபாடு, பகை

சொல் பொருள் விளக்கம்

(வி) மாறுபடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be inimical, disgaree

enmity, disagreement

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4

போரிட்டு மாறுபட்ட புலியைப் பிளந்த பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானை

இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ – கலி 105/48,49

இருபெரும் வேந்தர் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட
போர்க்களம் போன்று காட்சியளித்தது தொழு.

இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72

பெரிய போர்த்தொழின்கண் மாறுபாடுற்ற வல்லைமையுடையோர்

இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே – அகம் 0/4

பகையை அழித்து, கையினில் குந்தாலியுடன் மழுப்படை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *