Skip to content

சொல் பொருள்

(வி) அரசாள் (நிலையாய்த் தங்கு),

சொல் பொருள் விளக்கம்

அரசாள் (நிலையாய்த் தங்கு),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rule over (permanently stay)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79

ஈரும் பேனும் இருந்து அரசாண்டு (நிலைகொண்டு)

நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/7-9

நல்ல நெற்றியில்
புதிதாய் வந்து அரசாளும் (நிலையாய்க் குடியிருக்கும்) பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
– நன் நுதல் இருந்து இறைகூடி என்று கொள்வார் பின்னத்தூரார். நல்ல நெற்றியிலிருந்து
நிலைமிகுதலைக் கொண்ட பசலை நோய்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *