Skip to content
இலவம்

இலவம் என்பது இலவு மரம்.

1. சொல் பொருள்

(பெ) இலவு, ஒரு வகை மரம்,

2. சொல் பொருள் விளக்கம்

இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று. இம்மரம் உற்பத்திச் செய்யும் காய்களில் இருந்து பெறப்படும் நார் பொருள் இலவம் பஞ்சு ஆகும். இதன் பஞ்சைப் பட்டுப் பஞ்சு என்றும் அழைப்பர்

  • நீண்ட நடுப்பகுதியை உடையது, நடுப்பகுதி முட்களையுடையது, நடுப்பகுதி கருமையானது
  • தீப்பிடித்து எரிகிற நிறத்தில் பூக்கக்கூடியது
  • சிவந்த உதடுகளுக்கு இலவம்பூவின் இதழ்கள் உவமிக்கப்படுகின்றன

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Red-flowered silk-cotton tree, Bombax malabaricum, Ceiba pentandra;

இலவம்
இலவம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இலவம்
இலவம்பூ
நீண்ட நடுப்பகுதியை உடையது

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83

நடுப்பகுதி முட்களையுடையது

முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1

நடுப்பகுதி கருமையானது

கரும் கால் இலவத்து – அகம் 309/7

தீப்பிடித்து எரிகிற நிறத்தில் பூக்கக்கூடியது

எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் – ஐங் 368/1

எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10

நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/14,15

பெண்களின் சிவந்த உதடுகளுக்கு இலவம்பூவின் இதழ்கள் உவமிக்கப்படுகின்றன 

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து/ஒளிர் சினை அதிர வீசி விளிபட - நற் 105/1,2

முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ - ஐங் 320/1

எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் - ஐங் 368/1

நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் - அகம் 17/18

இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் - அகம் 25/9

நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து/அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/14,15

களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து/அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் - அகம் 309/7,8

ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை - குறி 86

இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்/மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் - ஐங் 338/2,3

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்/நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க - பரி  19/79,80

எரி உரு உறழ இலவம் மலர - கலி 33/10

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்/கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த - அகம் 11/3,4

ஆன்ஏற்றுகொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு - கலி 26/5

இலை இல மலர்ந்த இலவமொடு/நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே - அகம் 185/12,13
இலவு மரம்
இலவு மரம்
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் - புகார்:5/214

எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி - மணி:3/166

தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய் - சிந்தா:7 1701/2

என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி - சிந்தா:1 179/1

இலவம் போது ஏர் செ வாய் இளையோர் பொருவார் காண்-மின் - சிந்தா:4 927/4

இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி - சிந்தா:7 1588/1

இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன் - சிந்தா:7 1881/1

வயிர முள் நிரைத்து நீண்ட வார் சினை இலவம் ஏற்றி - சிந்தா:13 2766/1

தோயும் முள் இலவின் கூன் காய் சினை-தொறும் உதிர்வவே போல் - சிந்தா:3 788/2
இலவு மரம்
இலவு மரம்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே - தேவா-சம்:755/4

இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் - தேவா-சம்:2662/1

முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2

ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி - தேவா-சம்:3757/1

எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் - 5.திருநின்ற:4 64/3

பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து - சீறா:4092/2

எரி மலர் இலவத்து இரும் சினை இருந்த - உஞ்ஞை:54/143

விண்டு அலர் இலவத்து அண்டை சார்ந்து அவனை - உஞ்ஞை:55/132

ஊன் என மலர்ந்த வேனில் இலவத்து
கானத்து அக-வயின் கரந்தனன் இருந்த - இலாவாண:9/139,140

முள் அரை இலவத்துள் முழை அரண் முன்னி - உஞ்ஞை:53/178

முள் அரை இலவத்துள் அவர் இருப்ப - உஞ்ஞை:56/10

இலவம் கொம்பு-தோறு இறைகொண்டு ஈண்ட - உஞ்ஞை:54/36

முள் அரை இலவம் ஒள் எரி சூழ - உஞ்ஞை:56/214

இலவு அம் சோலையின் இறைமகன் போதர - உஞ்ஞை:56/43

ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் - உஞ்ஞை:52/43

துவள்வுஇல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால - கிட்:13 49/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *