சொல் பொருள்

(பெ) 1. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற
ஏழுவகை சுரங்களில் ஐந்தாவது சுரம்,

2. சிறுமை

சொல் பொருள் விளக்கம்

1. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற
ஏழுவகை சுரங்களில் ஐந்தாவது சுரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the fifth note of the gammut

dishonour, disgrace

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7

(இளி என்ற ஓசையை ஒலிக்கும் குறுகிய குழாய் இசைக்கருவியான தூம்புடன்)

இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3

(இன்பமுறக் கூடியும், சிறுமை தோன்றப் பணிந்தும்)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.