சொல் பொருள்
ஈவு – கொடை கொடுத்தல்.
இரக்கம் – அருள் புரிதல்.
சொல் பொருள் விளக்கம்
சாதல், ‘சாவு’ என ஆவது போல் ஈதல் ‘ஈவு’ ஆகியது. பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்துவாரைக் கடிகின்றது புறப்பாடல்.
(127)
இரக்கம் என்பது அருள் என்னும் பொருளாதல் வெளிப்படையாம்.
‘ஈவிரக்கமில்லாத பாவி’ எனப் பிறர்க்கு உதவானைப் பழித்தல் எவரும் அறிந்த செய்தியே.
இறைவன் அருளும் ஈவும், கணக்கில் பங்கிட்டுத்தரும் ஈவும் இவண் எண்ணுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்