உறந்தை என்பது சோழர்களின் தலைநகரம்
1. சொல் பொருள்
(பெ) சோழர்களின் தலைநகரம், உறையூர்
2. சொல் பொருள் விளக்கம்
சோழர்களின் தலைநகரம், உறையூர்
தற்போதுள்ள திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்றும் உறையூர் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The capital city of Chozhas, Uraiyoor
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2 வளம் பொருந்திய சோழரின் உறந்தையின் பெரிய நீர்த்துறையில் பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி - பட் 285 மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - நற் 400/7 வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை - குறு 116/2 கறங்கு இசை விழவின் உறந்தை குணாது - அகம் 4/14 பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் - அகம் 6/5 அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/5 நொச்சி வேலி தித்தன் உறந்தை/கல் முதிர் புறங்காட்டு அன்ன - அகம் 122/21,22 இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் - அகம் 137/6 தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை - அகம் 226/14 புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் - அகம் 237/14 கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன - அகம் 369/14 காவிரி படப்பை உறந்தை அன்ன - அகம் 385/4 மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - புறம் 39/8 அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே - புறம் 58/9 உறந்தை அன்ன உரை சால் நன் கலம் - புறம் 352/10 செல்லா நல் இசை உறந்தை குணாது - புறம் 395/19 ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று - சிறு 83 பங்குனி விழவின் உறந்தையொடு/உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே - நற் 234/7,8 உறந்தையோனே குருசில் - புறம் 68/18 பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே/பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை - புறம் 69/12,13 உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை - தேவா-அப்:148/2 பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் - 8.பொய்:2 7/4 மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் - புகார்: 8/3,4 செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் - முத்தொள்:38/1 பொற்பு ஆர் உறந்தை அகம் - முத்தொள்:44/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்