Skip to content

சொல் பொருள்

(வி) 1. தவிர், விலக்கு, 2. பாதுகாப்பளி,  3. பேணு, 4. (விருந்தினரை)வரவேற்று உபசரி, 5. வளர், 6. இறுகப்பிடி,

சொல் பொருள் விளக்கம்

தவிர், விலக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dispel, protect, guard, nourish, show courtesy (to guests), bring up, clutch or grasp tightly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அஞ்சிலோதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 181

“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட 180
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி,

முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/8,9

அவரின் முரசைக் கைப்பற்றி
அவர் காத்துநின்ற அரணையும் வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்

குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி – கலி 99/4,5

குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பேணிக்காக்கும் நல்ல ஊழான விதியை

மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23

மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.

அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/6,7

அன்னை வளர்த்துவிட்ட ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை
தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது.

பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 216-218

பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *