Skip to content

சொல் பொருள்

(வி) முடிவுபெறு,

சொல் பொருள் விளக்கம்

முடிவுபெறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be finished, come to an end

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/2

தம் செல்வம் எல்லாம் அழிந்துவிட்டமையால் வறுமையுற்ற பண்பு நிறைந்தவர்கள்

செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/18-20

பிரிந்து செல்வது என்ற தவறான செய்கைக்கான ஏற்பாடுகளின்போதே இவ்வாறு வருந்துபவள், நீ
சென்றுவிட்டால்
இவளுடைய நலம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமாதலால், போய்விட்ட இவளின்
இனிய உயிரை மீட்டுத் தர இயலுமோ,
– நலம்கடைகொளப்படும் – இவள் இறந்துபடுவாள் – நச். உரை, பெ.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *