சொல் பொருள்
கன்று – குட்டி என்னும் பொருளில் வழங்குவது கன்று.
கயந்தலை – பெரிய மெல்லிய தலையையுடைய யானைக்குட்டி கயந்தலை எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
கன்று ஆண்கன்று, மான் கன்று, யானைக் கன்று என வழங்கப்பெறும். ஆனால் கயந்தலையோ யானைக்கன்று ஒன்றை மட்டுமே குறிப்பதாயிற்று. கயம் என்பதற்குப் பெரிய என்னும் பொருள் உண்டு. கயந்தலை பெரிய தலையாம். ‘கயவாய்ப் புனிற்று எருமை’ என்பார் குமரகுருபரர். கயவாய் – பெரியவாய். யானைக்கன்றின் உடலோடு அதன் தலைப்பருமையை ஒப்பிடப் பெரியதாய் இருத்தல் கருதிவந்த பெயராம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.