Skip to content

சொல் பொருள்

(வி) 1. பழி, சினம் முதலியவற்றால் முகம் கடுமை ஏறி இரு, 2. முற்று,

2. (பெ) பசு. யானை. எருமை, கழுதை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் குட்டி

சொல் பொருள் விளக்கம்

பழி, சினம் முதலியவற்றால் முகம் கடுமை ஏறி இரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(of face) become hardened dut to anger or insult, reach a critical stage, calf, colt, young of certain animals

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்
கன்றி அதனை கடியவும் கைநீவி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/29-34

“அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம்
வைத்துக்கொள்ளாமல் இங்கு
கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு”; “சீச்சீ என்று நான்
சினந்து அதனைக் கடிந்துரைக்கவும், என் கையை மீறி
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்
தந்தையின் அகன்ற மார்பில் பாய்ந்தான், அந்த அறவுணர்வு இல்லாத
அன்பற்றவன் பெற்ற மகன்”.

கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/13,14

சினத்தால் கன்றிப்போன முகத்தையுடைய பகைவரை வென்று அவரின் களத்தைத் தனதாக்கிக்கொள்ளும்
வெற்றிச் சிறப்பில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,

சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் – பரி 6/96-98

“கோபங்கொள்ள வேண்டாம், உன் மையுண்ட கண்கள் கோபத்தினால் சிவப்பாவதைக் கண்டு அஞ்சுகின்ற
உன் தலைவனோடு
ஊடல் நீங்கி, நீரில் விளையாடுதலைத் தொடங்கு, ஊடல் மிகவும்
முற்றிப்போனால் உங்கள் காம இன்பத்தை அது கெடுத்துவிடும், மகளே!

கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
கரும் தாள் எருமை கன்று வெரூஉம் – ஐங் 97/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *