Skip to content
கயம்

கயம் என்பதன் பொருள்குளம், ஏரி, நீர்நிலை

சொல் பொருள்

(பெ) 1. குளம், ஏரி, நீர்நிலை, 2. மென்மை, பெருமை, இளமை, 3. கயமை; கீழ்மை, 4. கீழ்மக்கள், 5. யானை, கரிக்குருவி, கயவாய், 6. அகில், 7. தேய்வு, குறைபாடு, கேடு, காச நோய், நீர், கடல், ஆழம், அகழி

சொல் பொருள் விளக்கம்

குளம், ஏரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lake, tank, meanness, inferiority, Greatness, superiority, eminence, Youthfulness, tenderness, softness, the mean; the wicked; the vicious, elephant

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6

பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும்

கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1

மெல்லிய தலையையுடைய இளைய பெண்யானை குழியில் அகப்பட்டதாக

நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த - பெரும் 289

கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை - மது 363

கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து - மது 484

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் - மலை 47

கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் - மலை 259

கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி - மலை 307

கயம் கண் அற்ற பைது அறு காலை - நற் 22/9

தைஇ திங்கள் தண் கயம் படியும் - நற் 80/7

கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் - நற் 137/6

நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை - நற் 148/4

நிலம் செல செல்லா கயம் தலை குழவி - நற் 171/3

குளவி தண் கயம் குழைய தீண்டி - நற் 232/2

நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து - நற் 330/3

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் - குறு 9/6

கயம் நாடு யானை கவளம் மாந்தும் - குறு 170/3

வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை - குறு 215/4

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி - குறு 394/1

தைஇ தண் கயம் போல - ஐங் 84/4

மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கி - பதி 42/2

கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் - பரி 7/23

கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார் - பரி 9/50

அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின் - பரி 15/19

கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ - பரி 16/8

கண் வீற்றிருக்கும் கயம்/ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று - பரி  23/13,14

ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது - கலி 13/7

துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெம் சுரம் - கலி 20/6

யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற - கலி 33/2

மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப - கலி 35/5

களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் - கலி 72/19

கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் - கலி 80/2

கை புனை முக்காழ் கயம் தலை தாழ - கலி 86/2

கடி கயம் பாயும் அலந்து - கலி 92/44

மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த - கலி 118/9

கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு - அகம் 6/9

கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் - அகம் 11/6

தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி - அகம் 25/3

நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர - அகம் 36/8

கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர - அகம் 37/11

பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை - அகம் 44/17

மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க - அகம் 56/2

கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி - அகம் 121/5

கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என - அகம் 165/1

நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் - அகம் 177/17

இரும் கயம் துளங்க கால் உறு-தொறும் - அகம் 186/5

கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் - அகம் 189/3

கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப - அகம் 202/2

கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி - அகம் 229/4

கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம் - அகம் 263/3

கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் - அகம் 288/12

அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி - அகம் 353/12

துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் - அகம் 355/6

நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு - அகம் 361/12

தண் கயம் பயந்த வண் கால் குவளை - அகம் 395/1

காப்பு உடைய கயம் படியினை - புறம் 15/10

இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா - புறம் 44/1

தைஇ திங்கள் தண் கயம் போல - புறம் 70/6

மூதூர் வாயில் பனி கயம் மண்ணி - புறம் 79/1

மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க - புறம் 174/25

கடை குளத்து கயம் காய - புறம் 229/4

தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து - புறம் 243/3

கயம் களி முளியும் கோடை ஆயினும் - புறம் 266/2

ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி - புறம் 283/1

கயம் தலை மட பிடி புலம்ப - புறம் 303/8

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1

கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/12

கடல் ஆடி கயம் பாய்ந்து - புறம் 339/7

பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே - புறம் 341/8

களிறு பொர கலங்கிய தண் கயம் போல - புறம் 341/16

கயம் களியும் கோடை ஆயினும் - புறம் 389/3

செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை - நாலடி:36 6/3

கயம் பெருகின் பாவம் பெரிது - நான்மணி:90/4

கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை - ஐந்70:5/3

புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம்
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள் - திணை150:142/2,3

தழென மத எருமை தண் கயம் பாயும் - கைந்:37/2

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி - சிலப்.வஞ்சி 28/101

அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது - சிலப்.வஞ்சி 30/56

துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் - மணி 24/84
கயம்
கயம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *