1. சொல் பொருள்
(பெ) பறவைகளில் ஒருவகை
2. சொல் பொருள் விளக்கம்
கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு “கீழ் நோக்கி , தொங்குதல்” போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். இவற்றின் கண் மிகவும் கூர்மையானது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Eagle
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/11
கழுகுகள் புண்பட்டுக் கிடப்போரின் நிணத்தசைகளை பிடுங்கித் தின்றுவிட்டு, அவர்களின் கண்களைக் கொண்டு சென்று குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.
அழு குரல் பேய்மகள் அயர கழுகொடு/செம் செவி எருவை திரிதரும் – புறம் 370/25,26
அவற்றை எடுத்துப் பேய்ப்பெண் தன் அழுகுரலால் பாடிக் கூத்தாட, கழுகோடு
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ – ஐங் 314/2
கரிய கண்களையுடைய காக்கையோடு கழுகும் வானத்தில் ஒலியெழுப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது