Skip to content
காயா

காய்ப்பது இல்லை. எனவே இதனைக் ‘காயா’ என்றனர்.

1. சொல் பொருள்

(பெ)பூவை, காசா, அஞ்சனி, காயான், பூங்காலி மரம்

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு சிறிய பசுமையான மரமாகும். காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீலநிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது.

இம்மரம் இலங்கையில் காயான் என அழைக்கப்படும். இதற்கு அஞ்சனி, காசை வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன.

  1. முல்லை-நிலத்தில் பூக்கும் தேன் கொண்ட மென்மையான பூ
  2. மயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும்
  3. செறிவான இலைகளை உடையது.
  4. சிறுசிறு பூக்களாக இருக்கும்.

 “காடுகள் அழிந்தாலும் காயா அழியாது‘ என்று சொல்வதுண்டு.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Ironwood tree, Memecylon umbellatum, Memecylon edule, kind of Blue Jacaranda

காயா
காயான்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இதன் இலைகள் மிகவும் செறிந்திருப்பன; பூக்கள் கருநீல நிறமுடையவை

பொன் கொன்றை மணி காயா – பொரு 201

பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், மணி போன்ற காயா மலரினையும் உடைய

கரு நனை காயா கண மயில் அவிழவும் – சிறு 165

கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்

செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93

நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர

பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும்.

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70

பச்சிலைப்பூ, மகிழம்பூ, பல கொத்துக்களையுடைய காயாம்பூ

பொன் கொன்றை மணி காயா/நல் புறவின் நடை முனையின் - பொரு 201,202

கரு நனை காயா கண மயில் அவிழவும் - சிறு 165

செறி இலை காயா அஞ்சனம் மலர - முல் 93

பசும்பிடி வகுளம் பல் இணர் காயா/விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 70,71

புல்லென் காயா பூ கெழு பெரும் சினை - குறு 183/5

காயா கொன்றை நெய்தல் முல்லை - ஐங் 412/1

தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு - ஐங் 420/2

ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து - பரி 11/76

காயா மென் சினை தோய நீடி - அகம் 108/14

காயா ஞாயிற்று ஆக தலைப்பெய - அகம் 156/10

மணி மண்டு பவளம் போல காயா/அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகம் 374/13,14

மணி புரை உருவின காயாவும் பிறவும் - கலி 101/5

மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும்/புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் - கலி  103/1,2
காயா
காயான்
பன் மலர் காயாம் குறும் சினை கஞல - நற் 242/4

காயாம் குன்றத்து கொன்றை போல - நற் 371/1

காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை - கலி 103/52

காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை - கலி 108/10

தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி - கலி 108/43

காயாம் செம்மல் தாஅய் பல உடன் - அகம் 14/2

கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு - அகம் 133/8

காயாம் செம்மல் தாஅய் பல உடன் - அகம் 304/14

அஞ்சனம் காயா மலர குருகிலை - திணை50:21/1

கரு உற்ற காயா கண மயில் என்று அஞ்சி - திணை150:107/1

பூத்தாலும் காயா மரம் உள மூத்தாலும் - பழ:399/1

பூத்தாலும் காயா மரம் உள நன்று அறியார் - சிறுபஞ்:21/1

கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு - கார்40:8/3,4

காயா மரமே அல்லால் காய்த்த சினைகள் நிறுவா - தேம்பா:9 18/1
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய் - தேவா-சம்:4058/3

மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ - தேவா-சம்:4060/4

காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் - 4.மும்மை:5 79/4
காயான்
காயான்
கரு உடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண - நாலாயி:509/3

கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் - நாலாயி:589/1

கார் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் - நாலாயி:622/1

தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே - நாலாயி:993/4

பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் - நாலாயி:1123/3

காரில் திகழ் காயாவண்ணன் கதிர் முடி மேல் - நாலாயி:1683/3

கந்தம் கமழ் காயாவண்ணன் கதிர் முடி மேல் - நாலாயி:1686/3

தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயாவண்ணனே - நாலாயி:2432/2

புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே - நாலாயி:3854/4

புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய் - நாலாயி:3995/3

ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம்
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ - நாலாயி:2170/2,3

வாய்க்க தமியேற்கு ஊழி-தோறு ஊழிஊழி மா காயாம்
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் - நாலாயி:3779/1,2

அஞ்சனி
அஞ்சனி
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் - நாலாயி:249/4

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:648/3

ன்னம் விடுத்த முகில்_வண்ணன் காயாவின் - நாலாயி:2763/2

கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த - நாலாயி:3136/3

கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட - நாலாயி:2016/2

கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் - நாலாயி:2018/1,2

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற - நாலாயி:2657/1

விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா
வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் - சீறா:1000/2,3
பூங்காலி
பூங்காலி
கண்டு அனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன் - வில்லி:10 80/2

காயா மலர் வண்ணன் விளம்புதலும் கவி வெம் கொடியோன் இரு கை குவியா - வில்லி:45 203/4

கால முகிலும் மலர் காயாவும் அன்ன திரு - வில்லி:10 83/1

நீல நெடும் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும் நிகர்க்கும் இந்த - வில்லி:45 247/1

செறி இலை காயா சிறுபுறத்து உறைப்ப - உஞ்ஞை:49/115

காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்மாரி காட்டும் போலும் - மது:12/119

கலவ மா மயில் எருத்தில் கடி மலர் அவிழ்ந்தன காயா
உலக மன்னவன் திருநாள் ஒளி முடி அணிந்து நின்றவர் போல் - சிந்தா:7 1558/1,2

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ - பால:10 65/1

காவியின் மலர் காயா கடல் மழை அனையானை - அயோ:8 25/3

காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம்
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் - கிட்:10 50/1,2
காசா
காசா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *