Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகை ஆந்தை

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகை ஆந்தை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Rock horned owl, Bubo bengalensis

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குடிஞைகள் ஒலியெழுப்பும்போது இரட்டை இரட்டையாக ஒலி எழுப்பும்.

குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141

பேராந்தைகள் இரண்டிரண்டாக ஒலி எழுப்பும் நெடிய மலைச் சாரலில்

இரட்டுதல் என்றால் யானை மணி போல இரண்டாகச் சேர்ந்து ஒலித்தல்.
(யானை மணி ‘டிங் டாங், டிங் டாங்’ என்று ஒலிப்பதை அறிவோம்)

கோட்டான்கள் உடுக்கு அடிப்பதுபோல ஒலி எழுப்பும்.

அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6

பாலை வழியில் இருக்கும் கோட்டானின் உடுக்கடிப்பது போன்ற இனிய குரல்
(உடுக்குகள் டும்டும், டும்டும் என்று இரட்டிப்பாக ஒலிப்பதை அறிவோம்.

இதனையே பறவை இயலார் கூற்றும் உறுதிப்படுத்துகிறது.

Male has a deep, resonant, double hoot bu-whooh, repeated at intervals of several seconds”

இதன் குரல் இனிமையானது.

அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6

அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப – நற் 394/2,3

என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

குடிஞைகள் பெரும்பாலும் ஊரைவிட்டு அகன்றிருக்கும் மலைகளில் வாழும்.

குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141

திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – – அகம் 283/6

கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5

நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/13

புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7

என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : 

ஆண்டலை ஊமன் குரால் கூகை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *