குந்தாணி

குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு.இது தகரத்தால் செய்யப்பட்டது. ஒரு கல்லின் மேல் அதை வைத்துத் தவசம் போட்டு இடிக்கப் பயன்படுத்துவர். உரலின் மேல் வைத்தும் இடிக்கப் பயன்படுத்துவர். சிந்தாமல் சிதறாமல் இடிக்கப் பயன்படும்

1. சொல் பொருள்

(பெ)வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர் (பேச்சு வழக்கு)

குடலின் மேல் மூடி (உதரவிதானம்)

குந்து + ஆள் + ந் + இ =  குந்தாணி ஆகின்றது.

மரத்து உரல்

கண்ணோய் வகை

2. சொல் பொருள் விளக்கம்

உரலில் மேல்வாய் மேல் வைக்கும் சுற்றுச் சுவர்போன்ற வட்டத் தகடாகும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு(செக்கு போன்று பயன்படுத்தப்படும் பொருள்) மாதிரி வைத்திருப்பார்கள். வாய் அகன்று, கீழே (உரல் அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Protective ring placed over a mortar to prevent the grain from scattering, large mortar, diaphragm, an eye disease.

4. பயன்பாடு

இடை சுருங்க வேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் குதிர் போல இருக்கிறாள் என்றும் குந்தாணி போல் இருக்கிறாள்என்றும் உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம்.

“குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன” என்பது வழக்கு.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.