குருந்தம் என்பதுகாட்டு எலுமிச்சை வகை.
1. சொல் பொருள்
(பெ) காட்டு எலுமிச்சை வகை, சிறு குருந்து, பெருங்குருந்து
2. சொல் பொருள் விளக்கம்
இது குருந்தம், காட்டு கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படும் ஒருவகை மரம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A speicies of wild lime, Atalantia racemosa

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குருந்தம் பூ கண்ணி பொதுவன் – கலி 111/7 குருந்தம்பூச் சரத்தைத் தலையில் சூடிக்கொண்டிருந்த இடையன் குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை - கலி 111/7 தண் நறும் பூம் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய - திரி:0/2 குருந்தம் அங்கு ஒடுங்கு அழுத்தம் கொண்டு - திணை150:105/4 கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து - தேவா-சம்:485/3 குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் - தேவா-சம்:1078/2 குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம் - தேவா-சம்:1428/3 குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் - தேவா-சம்:2026/2 குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி - தேவா-சம்:3281/1 குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் - தேவா-அப் நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 1/3 திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 2/3 செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 3/3 திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 4/3 செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 5/3 செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 6/3 செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 7/3 சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 8/3 தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 9/3 திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் - திருவா:29 10/1 கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில் - திருமந்:2921/1 குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச்செய்து - நாலாயி:366/1 காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால் - நாலாயி:788/1,2 கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் - நாலாயி:1018/1 தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் - நாலாயி:1222/2 குருந்தம் தழுவும் கூடலூரே - நாலாயி:1364/4 புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து - நாலாயி:1894/1 போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும் - நாலாயி:2108/3 அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் - நாலாயி:2135/1 புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து - நாலாயி:2143/1 பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த - நாலாயி:2438/2 சாய குருந்தம் ஒசித்த தமியற்கு - நாலாயி:3513/1 நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே - திருப்:845/16 குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை - சிந்தா:5 1195/2

குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்