குற்றுயிரும் குலையுயிரும்

சொல் பொருள்

குற்றுயிர் – மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை.
குலையுயிர்- நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த்துடிப்பு இருக்கும் நிலை.
குறுமை – சிறுமை; வெளிப்பட அறியமுடியாமல் மெல்லெனச் செல்லும் மூச்சு நிலையை இவண் குறித்தது.

சொல் பொருள் விளக்கம்

குலை என்பது நெஞ்சாங்குலையாம் நுரையீரலைக் குறித்தது. அங்கே ஒடுங்கிய பின்னரே உயிர் பிரிந்தது என்று கொள்ளப்படுகின்றதாம். குலையை ‘ஈரற்குலை’ என்பதும் வழக்கு. “குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்” என்பது நடைமுறைச் செய்தி.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.