சொல் பொருள்

ஒரு வகைக் கொடி, கூதாளி

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகைக் கொடி, கூதாளி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Convolvulus, Ipomea

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இது கொடி வகையைச் சேர்ந்தது

கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14

கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில் கிடந்து

குளிர்காலத்தில் மலரும்.

கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2

கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட,

ஆண்கள் மாலையாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர்.

குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் – நற் 119/8,9

காட்டு மல்லிகையுடனே
கூதளத்து மலரையும் நெருக்கமாய்ச் சேர்த்துக்கட்டிய தலைமாலையை உடையவன்

மலையகத்து மக்கள் காட்டு மல்லிகையோடு இதனையும் வீட்டில் வளர்ப்பர்

அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
————-
கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/1-12

அருவி ஒலிக்கும் மூங்கில் நிறைந்த அகன்ற இடத்தில்
————-
கூதாளி கவின் பெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்தில்

இதில் வெண்கூதாளம் என்று ஒரு வகையும் உண்டு.

பைம் புதல் நளி சினை குருகு இருந்தன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/8-10

பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெள்ளையான நாரை இருந்ததைப் போல
வளம் பொருந்திய முகை விரிந்த வெள்ளைக் கூதாளத்தின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.