Skip to content

சொல் பொருள்

கெழு, சாரியை, இடைச்சொல், ஒப்பாக இரு, ஒளிர்கின்ற நிறம்

சொல் பொருள் விளக்கம்

கெழு, சாரியை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be similar to, A connective expletive in poetry, bright colour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2

துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம்
வீழ் தும்பி – பரி 8/22,23

ஏழு துளை, ஐந்து துளை கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை
விரும்புகின்ற தும்பியும்

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *