Skip to content

சொல் பொருள்

வளை, குவி, வளைவாக உண்டாக்கு, விரி

சொல் பொருள் விளக்கம்

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

enclose, envelop, encompass; to stretch round, join palms to make a cup, as though to drink water, construct in a curved form

spread out

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 43,44

விதம்விதமான, பலவாகிய பெரிய படைக்கு நடுவே, வேறோரிடத்தே,
நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு

சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் – பதி 39/13
சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,

பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு – குறு 60/2-4

பெரிய தேன்கூட்டைக் கண்ட கரிய காலையுடைய முடவன்
உள்ளங்கையைச் சிறியதாகக் குடையாகக் குவித்து, தரையில் அமர்ந்தவண்ணம்
அந்தத் தேனடையை மறுகையால் சுட்டிக்கொண்டு, குடைத்த கையை நக்கியதைப் போல்

தேர் செலவு அழுங்க திருவில் கோலி
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/1,2

தேரில் செல்லுதல் தவிர்க்கப்படவேண்டிய அளவுக்கு வானவில் வளைவாகத்தோற்றி
பெருத்த முழக்கத்துடன் மேகங்கள் மழையைச் சொரியத்தொடங்கிவிட்டன;
– கோலுதல் – வளைத்தல் – ஔ.சு.து.உரை விளக்கம்

வலாஅர் வல் வில் குலாவர கோலி – புறம் 324/6

வளாரால் செய்யப்பட்ட வில்லின் வைத்து வளைவுண்டாக வலித்து

மிசை படு சாந்தாற்றி போல எழிலி
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/30-32

மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட

புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிறு
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/9-12

பறவைகள் பலவும் கூடி
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றினது
ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செய்யாது, தம் சிறகுகளை விரித்து
நிழலைச் செய்து சுழன்றுகொண்டிருத்தலை யான் காணேன் என்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *