Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பகைமை, 2. நீர்,  3. சினம்,

சொல் பொருள் விளக்கம்

1. பகைமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hostility, water, anger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து – மது 112,113

பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,

தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90

குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர்

சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/58

சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *