சொல் பொருள்
சிண்டான் – சிற்றெலி அல்லது சுண்டெலி.
பொண்டான் – பேரெலி அல்லது பெருச்சாளி
சொல் பொருள் விளக்கம்
சிண்டு, சுண்டு என்பவை சிறுமைப்பொருளன. சிண்டான் என்பது சுண்டான் என்றும் வழங்கப்படும். பொந்து என்பது வயிற்றைக் குறிக்கும். வயிறு பருத்த வரைப் பொந்தன் என்பது வழக்கம். பொந்தன் ‘பொண்டான்’ ஆயிற்றாம். சிறிதேயுள்ள குடுமி ‘சிண்டு’ என்பதைக் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்