சொல் பொருள்

(பெ) 1. குறிஞ்சி நிலத்து ஊர், 2. சிற்றூர்

சொல் பொருள் விளக்கம்

1. குறிஞ்சிநிலத்து ஊர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Village in a hilly tract

a small village

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர – திரு 194-197

கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
மலையிடத்தேயுள்ள தம் ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,

கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற் 4/1

கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறிய ஊரில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.