Skip to content
சேந்தன்

சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர். சேந்தன் என்னும் சொல் ‘சேயோன்’ என்னும் முருகனைக் குறிக்கும்.இவன் காவிரி பாயும் ஆர்க்காடுப் பகுதியைச் சேர்ந்த அழிசி என்பானின் தந்தை,மகன்?

1. சொல் பொருள்

(பெ) ஆர்க்காடுப் பகுதியைச் சேர்ந்த அழிசி என்பானின் தந்தை,

திவாகரஞ் செய்வித்தோன்,

முருகன்,

சேந்தன்அமுதன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணி அம்மையின் மகன் ஆவார்.

2. சொல் பொருள் விளக்கம்

இந்தப் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர். சேந்தன் என்னும் சொல் ‘சேயோன்’ என்னும் முருகனைக் குறிக்கும்.

சேந்தன் என்வன் காவிரி பாயும் ஆர்க்காடுப் பகுதியைச் சேர்ந்த அழிசி என்பானின் தந்தை, சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன். அழிசி என்பவனின் தந்தை

பெயர்ஊர் / உறவுகுறிப்புகாலம் / நூற்றாண்டு
சேந்தன்சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன்அழிசி என்பவனின் மகன்சங்ககாலம்
பூதஞ்சேந்தனார்புலவர்இனியவை நாற்பது பாடியவர்7
செழியன்சேந்தன்பாண்டிய மன்னன் நெடுமாறனின் தந்தைமண்மகளை மறுக்கடிந்த சேந்தன்625-640
அம்பர்சேந்தன்அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல்திவாகர நிகண்டு பாடிய திவாகர முனிவருக்கு இன்னமுது ஊட்டியவன்850-880
செப்புறைசேந்தன்செப்புறை என்னும் ஊரிலிருந்த வள்ளல்நம்பியாண்டார் நம்பி திருப்பல்லாண்டு நூலில் குறிப்பிடப்படுபவன்950
நேந்தன்‘பொன்பற்றி’ எனப்பட்ட பொன்பரப்பி காவலன்[[பெருந்தேவனார் (வீரசோழிய உரையாசிரியர்)|வீரசோழிய உரையாசிரியர்களைப் போற்றியவன்11
சேந்தன்தூமான்‘தமிழின் கிழவன்’ எனப் போற்றப்படும் வள்ளல்சூளாமணி பாடிய தோலாமொழித் தேவரைப் பேணியவன்11
கூத்தப் பெருஞ்சேந்தன்சேனாவரையர் தொல்காப்பிய எச்சவியல் உரையில் வரும் மேற்கோள் பாடலில் குறிப்பிடப்படுபவன்13
நாங்கூர்ச்சேந்தன்நாங்கூர் வள்ளல்பட்டினத்தாரைச் சிறையிலிட்டவன்.14
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Many person named senthan, father of a person called azhici of Arkkaadu, The God Murugan,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வைகறை நெய்தல் நெல்லிடை மலர
வண்டு மூசு கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/3-6

புள்ளிகளையுடைய வேர்படையையுடைய சேந்தனின் தந்தையாகிய
தேன் பொருந்திய விரிந்த மலரால் தொடுக்கப்பட்ட மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட
தேரையுமுடைய அழிசியின்
வைகறைப் போதில் நெய்தல்கள் நெற்பயிரிடையே மலர்தலால்
வண்டினம் மொய்க்கும் கழனிகளையுடைய ஆர்க்காடு என்னும் ஊரைப் போல

இந்த ஆர்க்காடு காவிரிக்கரையில் உள்ளது என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
————— ———————- ——————-
அழிசி ஆர்க்காடு அன்ன – குறு 258/2-7

காவிரி நதியினது
பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வலர்ந்த மருதமரத்தில் கட்டிய
மேல் உயர்ந்த கொம்பினையுடைய யானைகளையுடைய சேந்தனுடைய தந்தை
————————– ————————-
அழிசியினது ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *