Skip to content
சேய்

சேய் என்பதன் பொருள்சேய்மை,குழந்தை,சிவப்பு,முருகன்

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. சேய்மை. தூரம்,

2. குழந்தை, மகன்/மகள், வாரிசு.

3. சிவப்பு,

4. சிவப்புக்காளை,

5. முருகன்.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

remoteness, distance

child, offspring, baby

redness

tawny coloured bull

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3

ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்

நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64

நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்

சேய் இறா எறிந்த சிறுவெண்காக்கை – நற் 31/2

சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,

வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18

நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்

செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று - சிறு 3

நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - மலை 64

சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் - மலை 300

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை - நற் 31/2

ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு - நற் 43/4

சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் - நற் 67/1

சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய - நற் 69/2

தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் - நற் 115/8

சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் - நற் 252/2

செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு - நற் 271/4

தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு - நற் 302/6

அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த - நற் 384/6

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு - குறு 262/5

சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது - குறு 269/1

சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் - குறு 314/1

நனி சேய் நாட்டர் நம் உன்னலரே - குறு 380/4

சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று - குறு 400/1

பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே - ஐங் 70/5

சேய் மலை நாடன் செய்த நோயே - ஐங் 242/5

காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் - பதி 73/11

சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய - பரி 1/4

சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி - பரி 5/2

கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை - பரி 5/36

சேய் உற்ற கார் நீர் வரவு - பரி 11/114

சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2

வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு - கலி 29/23

சேய் உயர் வெற்பனும் வந்தனன் - கலி 39/51

சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் - கலி 75/3

எல்இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே - கலி 81/16

சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் - கலி 81/27

சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை - கலி 131/24

சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே - கலி 148/24

வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு - அகம் 1/8

மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு - அகம் 21/5

வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு - அகம் 59/16

வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16

எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் - அகம் 113/19

நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு - அகம் 115/16

தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் - அகம் 152/22

செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் - அகம் 156/3

நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு - அகம் 187/3

புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் - அகம் 221/5

சேய் உயர் சினைய மா சிறை பறவை - அகம் 244/2

இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை - அகம் 373/10

சேய் நாட்டு செல் கிணைஞனை - புறம் 377/14

சேய் பொருது அட்ட களத்து - கள40:13/4

சேய் பொருது அட்ட களத்து - கள40:34/5

தாய் முலை உண்ணா குழவியும் சேய் மரபின் - திரி:84/2

சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே - சிலப்.வஞ்சி 26/139

சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப - மணி 9/30

சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி - மணி 19/118

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *