Skip to content

சொல் பொருள்

(பெ) சேர மன்னனுக்குரிய பெயர்,

சொல் பொருள் விளக்கம்

சேர மன்னனுக்குரிய பெயர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a common name for the chera kings

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/3,4

பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!

பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/1-6

பொன்னால் செய்யப்பட்ட தும்பைப் பூவையும், புள்ளிகள் பொருந்திய அம்பறாத்தூணியில்
புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்,
களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினையும்,
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,
ஏழுஅரசர்களின் மணிமுடியினின்றும் செய்யப்பட்ட பதக்கத்தை மார்பினில் அணிந்த சேரலே!

இது கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியது.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல
கொன்று களம் வேட்ட ஞான்றை – அகம் 36/13-22

கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய –
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக, ஒரு பகலிலே
முரசுகளுடன் வெண்கொற்றக்குடைகளையும் கைப்பற்றி, தன் புகழ் எங்கும் பரவ,
அவரைக் கொன்று களவேள்வி செய்த பொழுது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *