Skip to content

ஆ வரிசைச் சொற்கள்

ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஆண்டான்

சொல் பொருள் ஆண்டான் என்பது உயிர்களை எல்லாம் ஆளுந்தன்மையை உடைய கடவுளைக் குறிக்கின்றது சொல் பொருள் விளக்கம் ஆண்டான் என்னும் மொழி ஆள் என்னும் பகுதி அடியாகப் பிறந்த இறந்தகால வினையாலணையும் பெயர். ஆள்… Read More »ஆண்டான்

ஆண்கடன்

சொல் பொருள் ஆண்களாய் உள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர் செய்யும் கடன் சொல் பொருள் விளக்கம் ஆண்களாய் உள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர் செய்யும் கடன்.… Read More »ஆண்கடன்

ஆண்

சொல் பொருள் ஆண்மக்கள் சொல் பொருள் விளக்கம் ஆண்மக்கள் தம்மையும் தம் இந்திரியங்களையும் பிறரையும் ஆளும் வன்மையினாலேயே இப் பெயர் பெறுவர். (திருக்குறள். அழகும் அமைப்பும். 102)

ஆடவர்

சொல் பொருள் வீரர் சொல் பொருள் விளக்கம் ஆடவர்-வீரர் என்னும் பொருட்டு. “ஆடவன் கொன்றான் அச்சோ” என்பது பெரிய புராணம். (திருவிளை. சுந்தரப்போர். 26. ந. மு. வே.)

ஆசை

சொல் பொருள் ஆசு என்பது குற்றமெனக்கொண்டு, பற்று வைத்தல் குற்றமாம் என்ற கருத்தில் ‘ஆசை’ என்பது தமிழ் என்பாரும் உளர். சொல் பொருள் விளக்கம் ஆசை என்பது தமிழில் வழங்கும் பெருவழக்காகிய வடசொல் என்ப,… Read More »ஆசை

ஆசிரியர்

சொல் பொருள் மாணாக்கர்க்குப் பற்றுக் கோடானவர் சொல் பொருள் விளக்கம் ஆசு – பற்றுக்கோடு. மாணாக்கர்க்குப் பற்றுக் கோடானவர். (வடசொற்றமிழ் அகரவரிசை. 306.)

ஆசிரியப்பா

சொல் பொருள் சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்று ஆகலானும், புற நிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ‘ஆசிரியம்’ என்பதும் காரணக் குறி. சொல்… Read More »ஆசிரியப்பா

ஆள் அம்பு

சொல் பொருள் ஆள் – ஆள் துணைஅம்பு – அம்பு முதலிய கருவித் துணை. சொல் பொருள் விளக்கம் “ஆள் அம்பு அவனுக்கு நிரம்புவதுண்டு; அவனை நெருங்க முடியாது” “ அவனுக்கென்ன ஆள் அம்புக்குக்… Read More »ஆள் அம்பு

ஆறுதல் தேறுதல்

சொல் பொருள் ஆறுதல் – மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.தேறுதல் – ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர்.… Read More »ஆறுதல் தேறுதல்

ஆளும் பேரும்

சொல் பொருள் ஆள் – நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள்பேர் – ஆள் என்று பெயர் சொல்லத் தக்க சிறார் அல்லது இளைஞர். சொல் பொருள் விளக்கம் பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய… Read More »ஆளும் பேரும்