Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

நீக்குப் போக்கு

சொல் பொருள் நீக்கு – மறக்க வேண்டுவனவற்றை மறத்தல்.போக்கு – ஒதுக்க வேண்டுவனவற்றை ஒதுக்குதல் சொல் பொருள் விளக்கம் ஒரே கெடுபிடியாக இருந்தால் முடியுமா வாழ்க்கையில் நீக்குப் போக்கு கட்டாயம் வேண்டும் என்று பட்டறிவாளர்… Read More »நீக்குப் போக்கு

நிலம் நீச்சு

சொல் பொருள் நிலம் – நன்செய்நீச்சு – நீர்வாய்ப்பு. சொல் பொருள் விளக்கம் ‘நிலம் நீச்சு உண்டா?’ என்பது உழவரைப் பற்றிய ஒரு வினா. நிலம் நன்செய் ஆதல் ‘நிலபுலம்’ என்பதில் காண்க. நீச்சு… Read More »நிலம் நீச்சு

நிலபுலம்

சொல் பொருள் நிலம் – நன்செய்புலம் – புன்செய் சொல் பொருள் விளக்கம் செய்தற்கு ஏற்பப் பயன் தருவது செய்யாம். பண்ணுதல் செய்தல்- தொழிற் குறித்தே பண்ணை என்பதும் வந்தது. செய்க்குப் பண்படுத்துதல் முதண்மை.… Read More »நிலபுலம்

நிரப்புக் கலப்பு

சொல் பொருள் நிரப்பு – குறித்த அளவு தந்து நிரவலாக நடுதல்.கலப்பு – நிரவலாக இல்லாமல் இடைவெளி மிகப்பட நடுதல். சொல் பொருள் விளக்கம் நிரவல், சமனிலைப்பாடு என்னும் பொருளது. கலக்கமாவது அகலம் அகலமாக… Read More »நிரப்புக் கலப்பு

நாளும் பொழுதும்

சொல் பொருள் நாள் – இரவும் பகலும் கூடிய ஒரு நாள்பொழுது – ஒரு நாளில் திட்டப்படுத்தப்பட்ட ஒரு பொழுது. சொல் பொருள் விளக்கம் கதிரோனைக் கொண்டு பொழுது கணக்கிடப்படும். ‘பொழுது புறப்பட்டது’ ‘பொழுது… Read More »நாளும் பொழுதும்

நாணுதல் கோணுதல்

சொல் பொருள் நாணுதல் – நாணத்தால் தலைதாழ்தல்கோணுதல் – நாணத்தால் தலைதாழ்தலுடன் உடலும் வளைதல். சொல் பொருள் விளக்கம் “என்ன நாணிக் கோணி நிற்கிறாய்?” என்று வினாவுவார் உளர்; திருட்டுக் குற்றத்தில் அகப்பட்ட ஒருவன்… Read More »நாணுதல் கோணுதல்

நாடி நரம்பு

சொல் பொருள் நாடி – நாடித் துடிப்புநரம்பு – உணர்வுக்கு இடமாகிய நரம்பு. சொல் பொருள் விளக்கம் நரம்புக்கும், நாடிக்கும் மிகு தொடர்புண்மை வெளிப்படை. நாடிப் பார்ப்பதற்கு இடமாக இருப்பது குருதிக் குழாய். அதனுள்… Read More »நாடி நரம்பு

நலம் பொலம் (நல்லது – கெட்டது)

சொல் பொருள் நலம் – பூப்பு நீராட்டு மணம் போன்ற நன்னிகழ்ச்சிகள்.பொலம் – நோய் இறப்பு போன்ற தீய நிகழ்ச்சிகள். சொல் பொருள் விளக்கம் நல்லது பொல்லது என்பதும் இதுவே. உற்றார் உறவாக இருந்தும்… Read More »நலம் பொலம் (நல்லது – கெட்டது)

நல்லது நளியது

சொல் பொருள் நல்லது – கோயிலில் நிகழும் பொங்கல் விழா தேர்த்திருவிழா முதலிய விழாக்கள்.நளியது – கோயிலில் நிகழும் குளுமை சொரிதல் விழா. சொல் பொருள் விளக்கம் நன்மையாவது மங்கலம்; மங்கல விழாக்கள் நல்லது… Read More »நல்லது நளியது

நரம்பு நாற்று

சொல் பொருள் நரம்பு – நரம்பு வைத்துப் போன அல்லது முற்றிய நாற்று.நாற்று – நடுதற்குரிய பருவ நிலையில் அமைந்துள்ள நாற்று. சொல் பொருள் விளக்கம் காய்கறி தவச வித்துக்களை நாற்றாங்காலில் முளைக்கச் செய்து… Read More »நரம்பு நாற்று