Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பகுமானம்

பகுமானம்

பகுமானம் என்பதன் பொருள் தனிப்பெருமை, தற்பெருமை. 1. சொல் பொருள் பகுமானம் – தனிப்பெருமை, தற்பெருமை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Pride unreasonable and inordinate self-esteem 3. சொல் பொருள் விளக்கம் மானம்… Read More »பகுமானம்

பக்கப்பாட்டுப்பாடுதல்

சொல் பொருள் பக்கப்பாட்டுப்பாடுதல் – இணைந்து பேசுதல் சொல் பொருள் விளக்கம் இருவர் இணைந்து பாடினாலும் பலர் இணைந்து பாடினாலும் ஒருவர் பாடியதாகவே ஆகும். ஆனால், பக்கப்பாட்டு என்பது அவர்கள் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுவதாம்.… Read More »பக்கப்பாட்டுப்பாடுதல்

நோட்டம்

சொல் பொருள் நோட்டம் – உள்ளாய்வு சொல் பொருள் விளக்கம் “போகிறவர்கள் வருகிறவர்களை நோட்டம் பார்க்கிறானே என்ன? இவன் யார்? எந்த ஊரான்?” என்பது சிற்றூர்களில் கேட்கப்படும் செய்தி. களவு திருட்டு முதலிய குற்றங்கள்… Read More »நோட்டம்

நொறுநாட்டியம்

சொல் பொருள் நொறுநாட்டியம் – ஆகாதன செய்தல் சொல் பொருள் விளக்கம் நொறுநாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடுகளை (உணர்வுகளை)க் காட்டி நடிக்கும் நடிப்பாகும், அது‘நொற நாட்டியம்’ என்றும், ‘நொறு நாட்டியம் பிடித்தவன்’ என்றும்… Read More »நொறுநாட்டியம்

நொறுக்குதல்

சொல் பொருள் நொறுக்குதல் – எல்லாமும் தின்றுவிடல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் “பெட்டி நிறையப் பண்டம் வைத்துவிட்டுப் போனேன்; ஒன்றும் காணவில்லை; எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டாயா?” என்பதில் நொறுக்குதல் தின்னுதல் பொருளில் வருதல் காண்க.… Read More »நொறுக்குதல்

நெற்றிப்பணம்

சொல் பொருள் நெற்றிப்பணம் – விரும்பாது தரும் காசு சொல் பொருள் விளக்கம் இறந்தவர்கள் நெற்றியில் நாலணாக் காசு ஒன்றைப் பசைவைத்துப் பொட்டுப் போல ஒட்டுவர். அதற்கு நெற்றிப் பணம் என்பது பெயர். அப்பணம்… Read More »நெற்றிப்பணம்

நெருக்குதல்

சொல் பொருள் நெருக்குதல் – மலநீர் கழித்தல் சொல் பொருள் விளக்கம் நெருக்கம் என்பது செறிவுப் பொருளது. பயிர் நெருக்கம், களை நெருக்கம் என்பவை அதனைக் காட்டும். “எனக்கு நெருக்கமானவர்” என்பது உறவினர் நண்பர்… Read More »நெருக்குதல்

நெருக்கம்

சொல் பொருள் நெருக்கம் – நட்பு, உறவு சொல் பொருள் விளக்கம் நெருங்கி நெருங்கி அல்லது அடுத்தடுத்து இருப்பதே நெருக்கம். பயிர்கள் நெருக்கம், களைநெருக்கம் என வழங்குவர். மக்கள் நெருக்கம் மிகுதி நெரிசல்மிகுதி என… Read More »நெருக்கம்

நெடுங்கை

சொல் பொருள் நெடுங்கை – தாராளக்கை சொல் பொருள் விளக்கம் நெடியகை என்பது நீண்டகை என்பதைக் குறியாமல் தாராளமாக அள்ளித் தரும் கை, மிகச் செலவு செய்யும் கை என்னும் பொருளில் வரும்போது வழக்குச்… Read More »நெடுங்கை

நெட்டியைப் பிடித்தல்

சொல் பொருள் நெட்டியைப் பிடித்தல் – ஏவுதல், கடினமான வேலை சொல் பொருள் விளக்கம் நெட்டியாவது பிடர். குப்புற வீழ்த்த நினைவார், பிடரைப் பிடித்துத் தள்ளுவர். அவ்வழக்கம் பிடர் பிடித்துத் தள்ளாமலே, ஒரு செயலைச்… Read More »நெட்டியைப் பிடித்தல்