Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பொட்டித்தல்

சொல் பொருள் திறத்தல் சொல் பொருள் விளக்கம் பொட்டித்தல் என்பது திறத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பொட்டுப் பொட்டெனக் கண்ணை இமைத்தல்; பொட்டென்று கண்ணை மூடப் பொழுது இல்லாமல் தவிக்கிறேன்… Read More »பொட்டித்தல்

பொட்டன்

சொல் பொருள் காது கேளாதவன் சொல் பொருள் விளக்கம் காது கேளாதவனை விளவங்கோடு வட்டாரத்தார் பொட்டன் என்கின்றனர். செவிடன் என்பது பொருளாம். நீர் உள்ளே புகாமல் கெட்டிப்பட்ட மேட்டு நிலம் பொட்டல் எனப்படும். பயிரீட்டுக்குப்… Read More »பொட்டன்

பொங்கை

1. சொல் பொருள் வலுவின்மை மென்மை ஒல்லியானவன் 2. சொல் பொருள் விளக்கம் பொங்கு (இறகு) என்பது போலப் பொங்கை என்பதும் வலுவின்மை மென்மை என்னும் பொருள்களில் வழங்கும் சொல்லாகும். ஒல்லியானவன் என்னும் பொருளில்… Read More »பொங்கை

பொக்கம்

சொல் பொருள் உள்ளீடு அற்ற – மணியற்ற – தவசம், பயறு ஆயவை உயரம் சொல் பொருள் விளக்கம் பொக்கு என்பது உள்ளீடு அற்ற – மணியற்ற – தவசம், பயறு ஆயவை. அதனைக்… Read More »பொக்கம்

பேட்டுத் தேங்காய்

சொல் பொருள் வெறுங் கூடாக மட்டுமே இருக்கும் தேங்காய் சொல் பொருள் விளக்கம் தேங்காய் போன்ற தோற்றம் இருக்கும். ஆனால், அதனை உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இராது; வெறுங் கூடாக மட்டுமே இருக்கும்.… Read More »பேட்டுத் தேங்காய்

பேடு

சொல் பொருள் நண்டு குடியிருக்கும் வளை சொல் பொருள் விளக்கம் நண்டு குடியிருக்கும் வளையைப் பேடு என்பது உசிலம் பட்டி வட்டார வழக்காகும். ‘பேடு’ என்பது பெட்டி போலும் முதுகு உடைய நண்டு. நண்டின்… Read More »பேடு

பெரும் பயறு

சொல் பொருள் தட்டப் பயறு சொல் பொருள் விளக்கம் சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப் பயறு,… Read More »பெரும் பயறு

பெருக்கான்

1. சொல் பொருள் பேரெலி, பெருச்சாளி 2. சொல் பொருள் விளக்கம் எலியில் பெரியது பேரெலி. அதனைப் பெருச்சாளி என்பதும் பொண்டான் என்பதும் உண்டு. பேரெலியைப் பெருக்கான் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காக உள்ளது.… Read More »பெருக்கான்

பெரிய வீட்டுப் பொழுது

சொல் பொருள் விடியல் சொல் பொருள் விளக்கம் வைப்பு சின்னவீடு என்று வைத்திருப்பார் இரவுப் பொழுதில் அவண் தங்கி, தம் மனை மக்கள் இருப்பார் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது விடியல் ஆதலால், அதனைப் பெரிய… Read More »பெரிய வீட்டுப் பொழுது

பெண்தூக்குதல்

சொல் பொருள் பெண் அழைப்பு சடங்கு சொல் பொருள் விளக்கம் திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்னும் சடங்குகள் நிகழ்த்தப்படும். பெண் அழைப்பை, மதுக்கூர் வட்டாரத்தார் பெண் தூக்குதல் என வழங்கும்… Read More »பெண்தூக்குதல்