Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

நொய்யினிப்பு

சொல் பொருள் இரவை இலட்டு சொல் பொருள் விளக்கம் இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ‘ரவாலாடு’ என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை… Read More »நொய்யினிப்பு

நொய்யல்

நொய்யல்

நொய்யல் என்பது சிறிதடைந்த ஆறு 1. சொல் பொருள் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர் 2. சொல் பொருள் விளக்கம் பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின்… Read More »நொய்யல்

நொட்டை

சொல் பொருள் குறை சொல் பொருள் விளக்கம் “எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகி விட்டது” என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது. குறிப்பு:… Read More »நொட்டை

நொச்சு

சொல் பொருள் நொய்யரிசி சொல் பொருள் விளக்கம் நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல்.… Read More »நொச்சு

நைப்பு

சொல் பொருள் ஈரம் சொல் பொருள் விளக்கம் நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால்,… Read More »நைப்பு

நெறிமுகம்

சொல் பொருள் ஆறு கடலோடு கலக்கும் இடம் சொல் பொருள் விளக்கம் நெறி=வழி. இவண் நீர்வழி. கடலில் கப்பல் படகு ஆயவை வந்து செல்லும் துறை, முகம் எனப்படும். துறைமுகம் என்பது அது. ஆறு… Read More »நெறிமுகம்

நெளிப்பான்

சொல் பொருள் ஆடல்=கூத்து, நட்டுவம். சொல் பொருள் விளக்கம் ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல்… Read More »நெளிப்பான்

நெல்லுச் சேர்

சொல் பொருள் நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை சொல் பொருள் விளக்கம் நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை, நெல்லுச் சேர் என்பது நாகர்கோயிலொடும் ஒன்றிய புத்தனேரி வழக்காகும். சேர்க்கத் தக்க இடம் சேர் ஆயது.… Read More »நெல்லுச் சேர்

நெடுவாலி

சொல் பொருள் உடும்பு சொல் பொருள் விளக்கம் உடும்பு என்னும் ஊர் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு.… Read More »நெடுவாலி

நெடுப்பம்

சொல் பொருள் நீளம் சொல் பொருள் விளக்கம் நெடுப்பம் என்பது நீளம் என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. “நிலம் நெடுப்பமாக இருப்பதால் வாய்க்காலும் வரப்புமாகவே போய்விட்டது” என்பது வழக்கு. குறிப்பு: இது… Read More »நெடுப்பம்