Skip to content

கொ வரிசைச் சொற்கள்

கொ வரிசைச் சொற்கள், கொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கொ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கொ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கொள்வினை கொடுப்புவினை

சொல் பொருள் கொள்வினை – மணமகளை மணமகன் மணம் கொள்ளுதல்கொடுப்புவினை – மணமகனுக்கு மணமகளை மணமகள் வீட்டார் கொடுத்தல். சொல் பொருள் விளக்கம் மணப் பெண் எடுத்தல் கொடுத்தல் ஆகிய சடங்குகளைக் கொள்வினை கொடுப்புவினை… Read More »கொள்வினை கொடுப்புவினை

கொப்பும் குழையும்

சொல் பொருள் கொப்பு – மரக்கிளை.குழை – கொப்பில் உள்ள இலை தழை சொல் பொருள் விளக்கம் “கொப்பும் குழையுமாகவா மரத்தை வெட்டுவது? நிழலைக் கெடுத்துவிட்டாயே” என்பது வழக்கு. இலை என்பது தனித்ததாம். தழையென்பது… Read More »கொப்பும் குழையும்

கொந்துதல் குதறுதல்

சொல் பொருள் கொந்துதல் – பறவை தன் அலகால் ஒன்றைக் குத்திக் கிழித்தல் கொந்துதலாம்.குதறுதல் – கிழித்ததைக் குடைந்து அலகால் எடுத்து உதறுதல் குதறுதலாம். சொல் பொருள் விளக்கம் கொத்தி அல்லது குத்திக் குதறுதல்… Read More »கொந்துதல் குதறுதல்

கொத்தை கொசுறு

சொல் பொருள் கொத்தை – பழுதுப்பட்ட அல்லது கெட்டுப் போன பொருளாய் விலை குறைத்துத் தருவது. கொத்தை, சொத்தை எனவும், சூத்தை எனவும், சூன் எனவும் வழங்கும்.கொசுறு – காசு இல்லாமல் பிசுக்காக அல்லது… Read More »கொத்தை கொசுறு

கொத்துகூலி

சொல் பொருள் கொத்து – அன்றன்று தவசந்தந்து பெறும் வேலை.கூலி – ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ்செய்து தவசந்தந்து பெறும் வேலை. சொல் பொருள் விளக்கம் கொத்தும் கூலியும் தவசந்தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக்… Read More »கொத்துகூலி

கொள்ளுதல் கொடுத்தல்

சொல் பொருள் கொள்ளுதல் – பெண் கொள்ளுதல்கொடுத்தல் – பெண் கொடுத்தல் சொல் பொருள் விளக்கம் இதனைக் கொள்வினை கொடுப்புவினை என்றும், கொண்டவர் கொடுத்தவர் என்றும் கூறுவதுண்டு. கொள்ளுதல் கொடுத்தல் என்பவை பெறுதலும் தருதலும்… Read More »கொள்ளுதல் கொடுத்தல்

கொத்து குலை

சொல் பொருள் கொத்து – அவரை, துவரை முதலியவற்றின் காய்த்திரள்குலை – முந்திரி, வாழை முதலியவற்றின் காய்த்திரள். சொல் பொருள் விளக்கம் ‘கொத்துமுரி’ என்பது கொத்தினைக் குறிக்கும். கொத்துமுரி என்பது கொத்துமல்லியாம். கொத்து நிமிர்ந்தோ… Read More »கொத்து குலை

கொத்தல் கொதுக்கல்

சொல் பொருள் கொத்தல் – சதைப்பற்று இல்லாமல் காய்ந்து சுண்டிப் போன புளி; எளிதில் கரையாதது.கொதுக்கல் – கரைத்த பின்னர்க் கரையப்படாமல் எஞ்சும் சக்கை. சொல் பொருள் விளக்கம் புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பார்,… Read More »கொத்தல் கொதுக்கல்

கொட்டும் குரவையும்

சொல் பொருள் கொட்டு – கொட்டுக் கொட்டுதல்.குரவை (குலவை) – நாவையசைத்து ‘லல்லல்ல’ என ஒலித்தல். சொல் பொருள் விளக்கம் இறந்தவரைக் கொட்டும் குலவையுமாகக் கொண்டு போய்ச் சேர்த்தலைப் பெருமையாகச் சுட்டுவது நாட்டுப்புற வழக்கு.… Read More »கொட்டும் குரவையும்

கொன்னாளன்

சொல் பொருள் பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன் சொல் பொருள் விளக்கம் பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the person who leads an useless life தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் நறும்… Read More »கொன்னாளன்