Skip to content

கொத்தல் கொதுக்கல்

சொல் பொருள்

கொத்தல் – சதைப்பற்று இல்லாமல் காய்ந்து சுண்டிப் போன புளி; எளிதில் கரையாதது.
கொதுக்கல் – கரைத்த பின்னர்க் கரையப்படாமல் எஞ்சும் சக்கை.

சொல் பொருள் விளக்கம்

புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பார், புளி நன்றாகக் கரையாததாக இருப்பின் கொத்தலும் கொதுக்கலுமாக இருக்கிறது எனக்குறைப்பட்டுக் கொள்ளும் வழக்கில் இருந்து வந்தது இக்கொத்தல் கொதுக்கல்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *