Skip to content

கொட்டும் குரவையும்

சொல் பொருள்

கொட்டு – கொட்டுக் கொட்டுதல்.
குரவை (குலவை) – நாவையசைத்து ‘லல்லல்ல’ என ஒலித்தல்.

சொல் பொருள் விளக்கம்

இறந்தவரைக் கொட்டும் குலவையுமாகக் கொண்டு போய்ச் சேர்த்தலைப் பெருமையாகச் சுட்டுவது நாட்டுப்புற வழக்கு. அவ்வாறு செய்யாமல் கொண்டுபோய்ச் சேர்த்தவரை “தேடி என்ன செய்ய? ஒரு கொட்டு உண்டா? ஒரு குலவையுண்டா?” என்று பழிப்புரைப்பதும் உண்டு. குரவை என்னும் சொல் பழைய குரவைக் கூத்தை நினைவுப்படுத்தும், அதன் எச்சம் ‘குரவை’யாகலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *