Skip to content
ஞெமை

ஞெமை என்பதுஒரு மரம்

1. சொல் பொருள்

ஒரு மரம், நமை, வெள்ளை நாகை

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு மரம், நமை, வெள்ளை நாகை, வைக்காலிமரம்.

மரச் சிற்பங்கள் செய்வதற்கு பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை போன்ற மரங்கள் முதல் வகையாக பயன்படுத்தப்படுகின்றன. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ, துவளை, மருக்காரை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகிய மரங்கள் 2-வது வகையாக கையாளப்படுகின்றன. வெட்பாலை, ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளை கருங்காலி, அசோகம் ஆகியவை 3-ம் வகையிலான மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியவை 4-ம் வகையைச் சேர்ந்தவை. இப்படி மரச்சிற்பங்கள் செய்ய வகைவகையாக மரங்கள் இருந்தாலும், பெரும்பாலும் இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ள மருது ஆகிய மரங்களில் தான் அதிக அளவில் மரச்சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a tree, Anogeissus latifolia, Button tree,

நமை
நமை

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

விசை_மர கிளவியும் ஞெமையும் நமையும் - எழுத். உயி.மயங்:80/1
இந்த மரங்கள் இமயமலைப் பகுதியிலும் வளரும். உயரமாய் வளரக்கூடியவை

ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7

ஞெமை மரங்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலையான இமையத்தின் உச்சியில்

மரத்தின் உச்சியில் பருந்துகள் உட்கார்ந்திருக்கும்.

ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/6,7

ஞெமை மரத்தின் உச்சியில்
ஊனை விரும்பி பருந்து அமர்ந்திருந்து உயரே எழும்

இவை மலையின் உயரம் குறைவான சரிந்த பகுதிகளில் வளர்ந்திருக்கும்.

தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/2-7

மழையைப் பொழிகின்ற மலைச்சாரலில், தன்மேல் உதிர்கின்ற மலர்களைப் பரப்பிக்கொண்டு,
ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின் பெயரைக்கொண்ட நாகமரமும்,
அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் ஆகிய இவை வருந்தும்படியாக,
தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது – இனிய நீரையுடைய
காற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;

கோடைகாலத்தில் இவை காய்ந்துபோய் துளைகொண்ட அடியினவாய் வற்றலாகி நிற்கும்.

வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு – அகம் 145/1-5

வேர் முதல் முழு மரமும் வற்றி நின்ற துளைபட்ட அடியினைக் கொண்டதும்,
தேரின் மணி ஒலிபோல் சிள்வீடு என்னும் வண்டுகளொலிப்பதும் ஆகிய
காய்ந்துபோன மரங்களில் உள்ள பொன்னிறம் வாய்ந்த ஓந்தி
வெய்யிலால் அழகு இழந்த ஊர்களில் வருத்தம் கொள்வதால்
மெல்லெனத்தாவுகின்ற, வெள்ளிய ஞெமை மரங்களையுடைய அகன்றகாட்டகத்தே

கோடைகாலத்தில் இவற்றின் இலைகள் உதிர்ந்து, காற்றால் அலைக்கழிக்கப்பட்டுப் பேரொலி எழுப்பும்.

கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8

கல்லென்னும் ஒலி உண்டாக
ஞெமை மரத்தில் இலைகளை உதிர்த்த வெப்பம் பொருந்திய கோடக்காற்று

இவற்றின் அடி மரங்கள் திருத்தமாக வளைவு நெளிவு இன்றி இருக்கும்.

திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/13

செவ்விய அடி பொருந்திய ஞெமைமரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில்
ஞெமை
ஞெமை
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி - நற் 369/7

இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை - குறு 285/6

அகரு வழை ஞெமை ஆரம் இனைய - பரி 12/5

நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு - அகம் 145/5

ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை - அகம் 353/8

திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து - அகம் 395/13

அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை - நற் 394/2

அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி - அகம் 111/5

அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த - அகம் 171/7

அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் - அகம் 187/11

தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும்
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் - உஞ்ஞை:52/42,43

திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும் - இலாவாண:12/24

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *