சொல் பொருள்
தட்டு – உண்ணற்கும் மூடுவதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன.
முட்டு – அடுக்களை அல்லது சமையற்கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை சட்டி அண்டா குண்டா முதலிய பொருள்கள்.
சொல் பொருள் விளக்கம்
தட்டு முட்டுப் பொருள்கள் என்பது கைக்கும் காலுக்கும் தட்டவும் முட்டவும் இருப்பவை. எனினும் எடுக்க வாய்ப்பாக வைத்திருக்கும் பொருள்களாம்.
தட்டு-தட்டுதல்; முட்டு-முட்டுதல்; வினை; ‘தட்டு-தட்டம் போல்வன; முட்டு-முட்டி; பெயர்’ தென்னை பணை மரங்களின் பாளைசீவி முட்டி கட்டுதல் வழக்கம். பிச்சை முட்டி’ என்றொரு வழக்கும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்